மின்சார விநியோகத்தை நிறுத்துவதன் மூலம் பொது மக்கள் வேண்டுமென்றே அசௌகரியங்களுக்கு உள்ளாக்கப்பட மாட்டார்கள் என்று இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கத்தின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்தார்
அதேபோல் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் அதனை சரி செய்ய யாரும் முன்வர மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டார்.
தேசிய சொத்துக்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கெரவலப்பிட்டிய யுகதனவி மின்னிலையத்தின் 40% பங்குகளை விற்பது தொடர்பாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட எரிசக்தி நிறுவனமான நியூ ஃபோர்ட்ரெஸ் எனர்ஜி இன்க் உடனான ஒப்பந்தத்தை உடனடியாக நிறுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தவும் இந்த போராட்டம் நடத்தப்படும் என்றார்.