நெடுந்தீவில் இன்றைய தினம்; (ஜீலை 18) ஞாயிற்றுக்கிழமை பிரதேச வைத்தியசாலையிலஇரத்தன முகாம் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்ற நெடுந்;தீவு பிரதேச இளைஞர் கழக சம்மேளனமும் நெடுந்தீவு சமாதான நல்லினக்க குழு மற்றும் பொது அமைப்புக்களின் பங்களிப்புடன் இரத்த தான முகாம் இன்றைய தினம் காலை 09.30 மணி முதல் மாலை 03.00 மணிவரை இடம் பெற்றது.
32 தன்னார்வ குருதிக் கொடையாளர்கள் இணைந்து கொண்ட போதும் 28 குருதிக்கொடையாளர்கள் இணைந்து கொண்டு குருதிக் கொடை வழங்கினார்கள்.
இன்றைய கொரோனா தொற்றுக் காலப்பகுதிகளில் இரத்ததேவை மிக முக்கிய தேவையாக காணப்படுவதனைக் கருத்திற் கொண்டும். யாழ் மாவட்ட இளைஞர்; சம்மேளங்கள் அனைத்து பிரதேச செயலகங்களிலும் இடம் பெற்றுவருகின்ற நிலமையிலும் இன்றைய தினம் சமாதனத்திற்கான நல்லிண ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் இச் செயற்றிட்டம் இடம் பெற்றது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் நெடுந்தீவில் ஊரும் உறவும் அமைப்பின் ஊடாகவும் இரத்ததான முகாம் இடம் பெற்றது. அச் செயற்றி;ட்டத்தில் இணைந்து கொள்ளாதவர்கள் இன்றைய தினம் இணைந்து கொண்டனர்
இரத்தான முகாமில் நெடுந்தீவு பங்குத்தந்தை, கரித்தாஸ் நிறுவன பணியாளர்கள், செஞ்சிலுவைச்சங்கம் மற்றும் நெடுந்தீவு நல்லிணக்க குழு தலைவர் இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தர் வைத்திய அதிகாரி ஏனைய மதகுருமார்கள் சமுக அமைப்பு பிரதிநிதிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இரத்ததான நிகழ்வில் கலந்து கொண்ட குருதிக்கொடையாளர்களுக்கு நெஸ்ரமோல்ட் பால்மா பைக்கற்றும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.