இலங்கையைக் குறைந்தது இரண்டு வாரங்களுக்கு முழுமையாக முடக்க வேண்டும் என்று அரசிடம் ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன இதனை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“இலங்கையில் கோவிட் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மருத்துவமனைகளுக்குத் தேவையான அளவு அவசர சிகிச்சைப் பிரிவுகள் மற்றும் பி.சி.ஆர். இயந்திரங்களை அரசு வழங்க வேண்டும்.
சரியான தருணத்தில் சரியான முடிவு எடுப்பதே முக்கியமானதாகும். அரசு கோவிட்வின் மூன்றாவது அலையைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டது.
சிங்களப் புத்தாண்டுக்கு முன்னர் சுகாதார வழிகாட்டல்களை வழங்கத் சுகாதாரத் தரப்பினர் தவறிவிட்டனர்” – என்றார்.