இரட்டைக் குடியுரிமை பெற்றுக் கொள்வதற்கு பலர் விண்ணப்பம் செய்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2021 ஆம் ஆண்டில் இரட்டைக் குடியுரிமை பெற்றுக் கொள்வதற்காக 5401 பேர் குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தில் விண்ணப்பம் செய்துள்ளனர். விண்ணப்பம் செய்தவர்களில் 1621 பேர் அவுஸ்திரேலியாவில் வசிப்பவர்கள் என்று தெரியவருகின்றது.
ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த 885 பேரும், அமெரிக்காவைச் சேர்ந்த 795 பேரும், கனடாவைச் சேர்ந்த 371 பேரும் விண்ணப்பம் செய்துள்ளனர்.
சுவிட்சர்லாந்து, சுவீடன், நியூசிலாந்து, பிரான்ஸ், டென்மார்க் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களும் இவ்வாறு விண்ணப்பம் செய்துள்ளனர்.
2021ஆம் ஆண்டில் குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்தில் 3 லட்சத்து 82 ஆயிரத்து 560 பேருக்கு கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டை விடவும் கூடுதல் எண்ணிக்கையில் கடவுச்சீட்டுக்கள் 2021ஆம் ஆண்டில் வழங்கப்பட்டுள்ளது.