இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் முடிவு பெறுவதாக அமெரிக்க அதிபர்டொனால்ட் டிரம்ப் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
இதுகுறித்து, டிரம்ப்பின் சமூக வலைப்பக்கத்தில் கூறியதாவது, அனைவருக்கும்எனது மனமார்ந்த வாழ்த்துகள். இஸ்ரேலும் ஈரானும் போர்நிறுத்தத்துக்குமுழுமையாக ஒப்புக்கொண்டன.
இரு நாடுகளின் இராணுவ நடவடிக்கைகளும் முடிந்தவுடன், சுமார் 6 ஆறுமணிநேரத்தில் ஈரான் போர் நிறுத்தத்தைத் தொடங்கும். அதனைத் தொடர்ந்து, 12 மணிநேரத்தில் இஸ்ரேலும் போர்நிறுத்தத்தைத் தொடங்கும். அடுத்த 24 மணிநேரத்தில் இஸ்ரேல் – ஈரான் இடையிலான 12 நாள் போரின் முடிவு குறித்தஅதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்.
இந்தப் போர், பல ஆண்டுகளாக நடந்து, மத்திய கிழக்கையே அழித்திருக்கவேண்டிய ஒரு போராக அமைந்திருக்கும். ஆனால், அவ்வாறு நடக்கவில்லை; அது ஒருபோதும் நடக்காது.
இஸ்ரேல், ஈரானை கடவுள் ஆசிர்வதிப்பார்; மத்திய கிழக்கு மற்றும்அமெரிக்காவையும் கடவுள் ஆசிர்வதிப்பார். உலகை கடவுள் ஆசிர்வதிப்பார் என்றுதெரிவித்துள்ளார்.
ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதையடுத்து, இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.
இதனைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஈரானின் 3 அணுசக்திநிலையங்கள் மீது அமெரிக்காவும் தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து, நேற்றிரவு கட்டாரில் உள்ள அமெரிக்க விமானப் படைத் தளங்கள் மீது ஈரான்தாக்குதல் நடத்தியது. இருப்பினும், தாக்குதல் குறித்த முன்னறிவிப்புக்காகஈரானுக்கு டிரம்ப் நன்றி தெரிவித்தார்.
இந்த நிலையில்தான், இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர்நிறுத்த அறிவிப்புவெளியாகியுள்ளது.