திருநல்வேலி பாற்பண்ணைப் பகுதி கண்காணிப்பு வலயமாக மாற்றப்பட்டது. அதனால் அந்தப் பிரதேசத்தில் இருந்த மக்கள் வெளியேறுவதும், உள்ளே செல்வதும் மறு அறிவித்தல் இடை நிறுத்தப்பட்டுள்ளது. என்று யாழ் மாவடட அரசாங்க அதிபர் திரு.செ.மகேசன் அவர்கள் தெரிவித்தார்.
திருநல்வேலி முத்துதம்பி வித்தியாலயம், மற்றும் திருநல்வேலி பரமேஸ்வராக் கல்லூாி என்பன மறு அறிவித்;தல் வரை மூடப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் இருந்து அத்தியவசிய தேவை மற்றும் தொழில் நிமித்தம் வெளியில் செல்வோர். அலுவலக அடையாள அட்டையினைக் காணப்பித்து பயணிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் (மார்ச் 28) மாவட்ட செயலாளர் தலமையில் மாவட்ட செயலகத்தில் இடம் பெற்ற கலந்துரையாடலில் மேற்கொண்ட தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டது.
யுhழ்ப்பாண மாவட்டத்தில் மார்ச் மாதத்தில் 300இற்று மேற்பட்ட தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதுடன் நேற்றைய தினம் 143 பேர் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
சுயதனிமைப்படுத்தல் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன நேற்றிரவுவரை 244 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
நுல்லூர் யாழ்ப்பாண சுகாதார பிரிவிற்குள் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதுடன், இதனைக் கருத்திற் கொண்டு கட்டுபாடுகள் விதிக்கப் பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சுடன் கலந்துரையாடி மேற்குறிப்பிட்ட இரண்டு பாடசாலைகளையும மூடியுள்ளதுடன் பாற்பண்ணைக் கிராமத்தில் இருந்து மக்கள் வெளியேறுவது முற்றாக தடைப்படுத்தப்படுத்தப்படுகின்றது. அவசர தேவைகளின் நிமித்தம் செல்வோர் சுகாதார பணியாளர்களின் அனுமதியினைப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது,
திருநல்வேலி சந்தைக் கட்டிட வியாபார நடவடிக்கையில் ஈடுபடுவோர் யாவரும் தனிமைப்படுத்தப்பட்டுளு;ளனர் அடையாளப்படுத்தப்படுகின்ற மாணவர்கள் பாடசாலைகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் தெவிக்கப்படுகி;ன்றது.