ஆலமாவன கலைக் குழுமத்தின் சிறந்த நாட்டுக்கூத்து கலைஞரும் பரதநாட்டிய நங்கையுமான விஜயகுமாரன் தனுசா இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கதிறன் விருது வழங்கல் விழாவில் பேச்சாற்றல் போட்டியில் தேசிய ரீதியில் 2 ஆம் இடத்தைப் பெற்றுள்ளார்.
இவர் மிகச்சிறிய வயதில் (6 வயதில் கண்டியரசன்) நாட்டுக்கூத்து மேடையேற்றம் கண்டவராவார்.
நெடுந்தீவு கிழக்கு ஆலமாவனப் பிள்ளையார் அறநெறிப் பாடசாலை மாணவியான தனுசா இன்று (டிசெம்பர் 29) இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியில் கெளரவிக்கப்பட்டார்.