இலங்கையில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ள பாடசாலைகளில் ஸ்ரீலங்கா விமானப்படையினரை ஈடுபடுத்த முடியும் என விமானப்படையின் எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன தெரிவித்துள்ளார்.
இதன்படி, மேற்படி பாடசாலைகளில் ஆங்கிலம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பாடங்களை கற்பிப்பதற்காக விமானப்படையினரை ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன முன்வைத்த யோசனைக்கு ஸ்ரீலங்கா கல்வி அமைச்சு இணக்கம் வெளியிட்டுள்ளது.
இதன் முதற்கட்டமாக வவுனியா மாவட்டத்திலுள்ள பின்தங்கிய பாடசாலைகளில் குறித்த பாடங்களை கற்பிப்பதற்காக விமானப்படையினரை ஈடுபடுத்தவுள்ளதுடன் ஏனைய பிரதேசங்களிலும் பின்தங்கிய பாடசாலைகளுக்கு விமானப்படையினரை ஈடுபடுத்துவதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்