அருணலு கடன் வழங்கல் தொடர்பான விழிப்புணர்வூட்டல் கருத்தமர்வு
நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் சமுர்த்தி வங்கி முகாமையாளர் திருமதி. கோ. பாமினி அவர்களின் தலைமையில் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் சுபிட்சத்தின் நோக்கு வாரத்தை முன்னிட்டு (02.03.2021 – 08.03.2021)
அருணலு கடன் வழங்கல் தொடர்பான விழிப்புணர்வூட்டல் கருத்தமர்வு இன்று (MARCH 04) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் எமது மதிப்புக்குரிய பிரதேச செயலாளர் F.C. சத்தியசோதி அவர்களும உதவி பிரதேச செயலாளர் , பொதுஜன பெரமுன கட்சியின் நெடுந்தீவு இணைப்பாளர் ,நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர் ,சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.