அரச வங்கிகளின் 20 வீத பங்குகளை விற்பனை செய்ய வரவு – செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இத்திட்டத்தை தோற்கடிக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்படும் என இலங்கை வங்கி ஊழியர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச வங்கிகளில் 20வீத பங்குகள் விற்பனை செய்யப்பட்டால் அது தேசிய குற்றமாகும். இதன் மூலம் வங்கிகள் முழுமையாக விற்பனை செய்யப்படலாம்.
வங்கிப் பங்குகளை இதற்கு முன்னரும் இவ்வாறு விற்பனை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அந்த முயற்சிகள் தோற்கடிக்கப்பட்டன.
பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் நெருக்கடியின் போது, அரச வங்கிகள் இலாபம் ஈட்டி, திறைசேரிக்கு வரி செலுத்தியதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளன என்றும் இலங்கை வங்கி ஊழியர் சங்கம் கூறியுள்ளது.