நஷ்டம் ஏற்படும் அரச நிறுவனங்களில் 2022 ஆம் ஆண்டு ஏற்பட்டுள்ள நஷ்டம் ஒரு லட்சத்து இரண்டாயிரத்து தொள்ளாயிரம் கோடி என நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சிம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இந்த நஷ்டம் அரசு கல்வி மற்றும் சுகாதார பிரிவுக்கு செலவிடும் தொகைக்கு சமமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நஷ்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்க சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனை தேவையா எனக் கேட்ட ராஜாங்க அமைச்சர் மறு சீரமைப்பு செய்வதால் நன்மையடைவது இந்நாட்டுப் பொதுமக்களேயன்றி சர்வதேச நாணய நிதியமல்ல எனவும் தெரிவித்தார்.