இன்றைய தினம் நவம்பர் 23 காலை தமது பணியின் நிமித்தம் யாழில் இருந்து நெடுந்தீவுக்கு செல்லும் அரச உத்தியோகத்தர்கள் பலர் தமது கடமையின் நிமித்தம் நெடுந்தீவு செல்வதற்காக குறிகட்டுவான் இறங்கு துறைமுகத்திற்கு சென்ற போதும் தற்போதைய கொரோனா பாதுகாப்பு காரணங்களை அடிப்படையாகக் கொண்டு அவர்களை ஏற்றாது குமுதினி புறப்பட்டது
தறபோதைய கொரோனா வைரஸ்தாக்கத்தின் காரணமாக பாதுகாப்பு நடவடிக்கையினைக் கருத்திற் கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட அறுபது பிராயாணிகளுடனேயே போக்குவரத்து இடம் பெறுகின்றது இதன் காரணமாக காலை 07.40 மணிக்கு 60 பிரயாணிகள் வருகைதந்தமையால் குமுதினிப் படகு 07.40 மணிக்கு புறப்பட்டுள்ளது இதனால் அதன் பின்னர் வருகை தந்த அரச உத்தியோகத்தர்கள் குறிப்பிட்ட படகில் செல்ல முடியாத நிலமையேற்பட்டது.
இதனால் விரக்தியடைந்த அரச உத்தியோகத்தர்கள் தங்களது போக்குவரத்து பிரச்சனையினை தீர்வு செய்து வழங்குமாறு மாவட்ட செயலாளருக்கு கடிதம் எழுதி 35பேர் கையெழுத்திட்டு அனுப்பி வைத்துள்ளனர்.
அண்மைக்காலமாக தற்போது 60 பிரயாணிகள் பயணம் மேற்கொள்வதால் நாளந்தம் குறிப்பிட்ட அரச உத்தியோகத்தர்கள் பிரயாணம் செய்வதால் மக்களும் பாதிக்கபட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. இதன் காரணமாகவே 03நேர படகுச் சேவை ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் அறிய முடிகின்றது
அரச உத்தியோகத்தர்கள் மட்டுமன்றி தீவக மக்களும் தங்களது அன்றாட கடமைகளை மேற்கொள்வதற்கான போக்குவரத்து வசதிகளை உரிய தரப்பினர் பொது அமைப்புக்களுடன் கலந்துரையாடி சரியான தீர்வினை பெற்று வழங்க வேண்டும்
நெடுந்தீவு மக்களது போக்குவரத்து சீர் செயயப்படுகின்ற போதுதான் ஏனைய செயற்பாடுகள் வெற்றியளிக்கப்படும் என்பது திண்ணம்