தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி இன்று (ஜனவாி 05) யாழில் கவனயீா்ப்பு போராட்டம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
வடக்கு கிழக்கு சிவில் அமைப்புக்கள், அரசியற் கைதிகளின் உறவினா்களின் ஏற்பாட்டில் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி யாழ்ப்பாணம் நல்லூா் ஆதினத்திற்கு முன்பாக இப் போரட்டம் இடம் பெற்றது.
இப்போரட்டத்தில் சிவில் அமைப்பு பிரதிநிதிகள், சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் உறவினா்கள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினா்கள்,சமூக ஆா்வலா்கள் எனப் பலரும் கலந்து கொண்டனா்.
இதே நேரம் காலை 10 மணிக்கு பெண்கள் வாழ்வுாிமை கழகத்தின் ஏற்பாட்டில் மாங்குளம் பகுதியில் கைதிகளின் விடுதலை வலியுறுத்தி கவனயீா்ப்பு போரட்டம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இப்போரட்டத்தில் நாடளுமன்ற உறுப்பினா் வினோதரலிங்கம், பொது அமைப்புக்களின் பிரதிநிதிள் காணமல் ஆக்கப்பட்ட சிறைகளில் வாடுகின்றவா்களின் உறவுகள் சமூக ஆா்வலா்கள் எனப் பலரும் கலந்து கொண்டனா்.