அனலைதீவிலிருந்து மீன்பிடிக்கச் சென்று, இயந்திர கோளாறின் காரணமாக இந்தியாவில் சிறைபிடிக்கப்பட்ட மூன்று மீனவர்கள் நேற்று (டிசம்பர் 21) யாழ்ப்பாணம் வந்தடைந்தனர்.
அவர்களில் இருவர் அனலைதீவைச் சேர்ந்தவர்களாகவும், ஒருவர் மட்டக்களப்பு வந்தாறுமூலையைச் சேர்ந்தவராகவும் இருக்கின்றனர்.
கடந்த 7 மாதங்களுக்கு முன்பு, அனலைதீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இயந்திரம் பழுதடைந்ததால் இந்த மீனவர்கள் இந்திய கரையோரத்தை சென்றடைந்தனர். இதைத் தொடர்ந்து, இந்திய கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட அவர்கள், ஆரம்பத்தில் சென்னை புழல் சிறையிலும் பின்னர் திருச்சி இடைத்தங்கல் முகாமிலும் தங்க வைக்கப்பட்டனர்.
அவர்களில், அனலைதீவைச் சேர்ந்த நாகலிங்கம் விஜயகுமார் (36 வயது), ஒரு பிள்ளையின் தந்தையாகவும், மைக்கல் பெனான்டோ (44 வயது), மூன்று பிள்ளைகளின் தந்தையாகவும் இருக்கின்றனர்.