வல்வெட்டித்துறை கடற்பிராந்தியத்தில் 44 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய கேரள கஞ்சா நேற்றிரவு (ஏப்ரல் 9) கைப்பற்றப்பட்டுள்ளது.
கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கையின் போது குறித்த கேரள கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டன.
134 கிலோ 300 கிராம் கேரள கஞ்சா கடலில் மிதந்து கொண்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
58 பொதிகளில் இவை பொதியிடப்பட்டிருந்ததுடன், சந்தேகநபர்களால் இவை கடலில் இடப்பட்டிருக்கலாம் என கடற்படையினர் சந்தேகிக்கின்றனர்.