வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் 200 ஆவது ஆண்டை முன்னிட்டு எதிர்வரும் 20 ஆம் திகதி திங்கட்கிழமை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியினரால் விசேட அறிமுக நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.
காலை 9.00 மணியளவில் வட்டுக்கோட்டை தென்னிந்தியத் திருச்சபையின் பேராலயத்தில் விசேட ஆராதனை வழிபாடுகள் இடம்பெற்று தொடர்ச்சியாக புனர்நிர்மாணம் செய்யப்ட்ட கல்லூரியின் மைதானத்தில் கல்லூரியின் அதிபர் தலைமையில் 200 மரக்கன்றுகளை நாட்டும் செயற்திட்டம் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
200 ஆவது ஆண்யை முன்னிட்டு தயாரிக்கப்ட்ட விசேட சின்னமும், புதிய காலுறை, ஜேர்சி என்பனவும் அறிமுகப்படுத்தபடவுள்ளது.
வட்டுக்கோட்டை தென்னிந்திய திருச்சபையின் பேராயர், மெதடிஸ் திருச்சபையின் தலைவர், அங்கெலிக்கன் திருச்சபையின் தலைவர், கல்லூரியின் அதிபர், யாழ் மாவட்ட தனியார் பாடசாலைகளின் அதிபர்கள், கல்லூரியின் முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்கள் , மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.