யாழ்.பரிசோதனைக் கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா தொடர்பிலான பரிசோதனையின் போது ஒருவர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
கொரோனா தொடர்பில் நாளாந்தம் வெளியிடுகின்ற அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நேற்று (ஜூலை 27) பரிசோதனையில் விடத்தல் பளை தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
நேற்று 130 பேருக்கான பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.
பரிசோதனைக்குட்பட்டவர்களின் விபரங்கள்:
- போதனா வைத்தியசாலையில் பரிசோதிக்கப்பட்டவர்கள் – 6 பேர்.
- ஆதாரவைத்தியசாலை ஊர்காவற்துறை – ஒருவர்.
- ஆதாரவைத்தியசாலை , பருத்தித்துறை – 6 பேர்.
- தனிமைப்படுத்தல் மையம் விடத்தல்பளை – 4 பேர்.( ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது)
- தனிமைப்படுத்தல் மையம் இயக்கச்சி – 110 பேர்.
- தனிமைப்படுத்தல் மையம் பூவரசங்குளம் – 3 பேர்.