யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்துக்கு உட்பட்ட 15 பிரதேச செயலர் பிரிவுகளில் போதிய உணவு இன்றி 13 ஆயிரத்து 888 பேர் உள்ளனர் என்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
யாழ். மாவட்டத்தில் போதிய உணவில்லாது இருப்போர் பட்டியலில் ஊர்காவற்றுறைப் பிரதேச செயலகம் முதலிடத்தில் உள்ளது.
ஊர்காவற்றுறை பிரதேச செயலகம் 2 ஆயிரத்து 966 பேருடன் முதலிடத்திலும், பருத்தித்துறை பிரதேச செயலகம் 2 ஆயிரத்து 618 பேருடன் இரண்டாம் இடதிலும், சங்கானை பிரதேச செயலகம் 2 ஆயிரத்து 245 பேருடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.
உடுவில் பிரதேச செயலகம் ஆயிரம் 800 பேருடனும், நெடுந்தீவு பிரதேச செயலகம் 932 பேருடனும், மருதங்கேணி பிரதேச செயலகம் 705 பேருடனும், வேலணைப் பிரதேச செயலகம் 682 பேருடனும், கோப்பாய் பிரதேச செயகம் 564 பேருடனும், கரவெட்டிப் பிரதேச செயலகம் 377 பேருடனும், யாழ்ப்பாணம் பிரதேச செயலகம் 124 பேருடனும், சாவகச்சேரி பிரதேச செயலகம் 120 பேருடனும், சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் 108 பேருடனும், காரைநகர் பிரதேச செயலகம் 38 பேருடனும் அடுத்தடுத்த நிலைகளில் உள்ளன.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மந்த போசாக்குள்ளவர்களாக 8 ஆயிரத்து 112 பேர் காணப்படுகின்றனர்.
அவர்களில் 5 வயதுக்குட்பட்டவர்கள் 3 ஆயிரத்து 796 பேர் என்றும், 5 வயது தொடக்கம் 9 வயதுக்குட்பட்டவர்கள் 2 ஆயிரத்து 9969 பேர் என்றும், 10 வயது தொடக்கம் 17 வயதுக்குட்பட்டவர்கள் 2 ஆயிரத்து 347 பேர் என்றும் புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.