மல்லாவியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் ஒருவர்சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் அனிச்சங்குளம், மல்லாவியைச் சேர்ந்த 28 வயதுடையமூன்று பிள்ளைகளின் தந்தை ஆவார்.
கடந்த 23 இரவு துவிச்சக்கர வண்டியில் குறித்த நபர் சென்று கொண்டிருந்தபோது எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதிவிபத்துக்குள்ளானார்.
இதனையடுத்து அவர் மல்லாவி வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டு பின்னர்கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காகயாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில்நேற்றையதினம் (ஜூன் 06) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இம் மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணைஅதிகாரி விசாரணைகளை மேற்கொண்டதுடன் உடலம் உறவினர்களிடம் கையளிக்கப்ட்டுள்ளது.