மருதமடு அன்னையின் நெடுந்தீவுக்கான திருப்பயணம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல்21) இடம்பெறவுள்ள நிலையில் நெடுந்தீவு பிரதேசம் விழாக்கோலம்.
திருப்பயண விழாவிற்கான முன்னாயத்த திருதின வழிபாடுகள் புனித யுவானியார்ஆலத்தில் இடம்பெறவுள்ள நிலையில் நேற்றையதினம (ஏப்ரல் 18) மாலை05:00 மணிக்கு கொடியேற்றமும் தொடர்ந்து திருப்பலியும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
நெடுந்தீவில் உள்ள ஆலய பங்கு மக்கள் அன்னையை வரவேற்கும் வகையிலான வரவேற்பு வளைவுகள் , பதாதைகள் , தோரணங்கள் போன்றவற்றை அமைக்கும் வேலைகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 21) காலை 10.00 மணி முதல் மாலை 3.00 மணிவரை மருதமடு அன்னை நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் தரித்திருக்க ஏற்பாடாகி உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.