சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அசங்க கரவிட்ட, குற்றப் புலனாய்வு பிரிவுமற்றும் நிதி குற்றப் புலனாய்வு பிரிவு ஆகியவற்றுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிபொலிஸ்மா அதிபராக இடமாற்றப்பட்டுள்ளார்.
பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.டி.பி. தயாரத்ன இரத்தினபுரி மாவட்டத்தில் நிதிகுற்றப்புலனாய்வு பிரிவுக்கு பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த இடமாற்றங்களுக்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதிவழங்கியுள்ளது.
நிதிக் குற்றச் செயல்கள் தொடர்பான வழக்குகளைக் கையாள்வதற்காக அடுத்தவாரம் நிதி குற்றப் புலனாய்வு பிரிவு ஸ்தாபிக்கப்படும் என பொது மக்கள்பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
இதேவேளை, மேல் மாகாண போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பிரதிபொலிஸ் மா அதிபர் பி.லியனகே உடன் அமுலுக்கு வரும் வகையில் மேல்(வடக்கு) மாகாணத்தை மேற்பார்வையிடுவதற்கான பிரதி பொலிஸ் மா அதிபராகஇடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பிரதி பொலிஸ் மா அதிபர் எஸ்.எம்.வை. செனவிரத்ன இரத்தினபுரி மற்றும்கேகாலை ஆகிய இரு மாவட்டங்களையும் மேற்பார்வையிடும் விசேடகடமைகளையும் ஏற்றுக்கொள்வார்.
12.02.2025 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மேற்படி உயர் பதவிகளில்உள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.