30.11.2024 சனிக்கிழமை முற்பகல் 11.30 மணி வானிலை அவதானிப்பு,,
பெங்கால் புயல் தற்போது பருத்தித்துறையில் இருந்து வடக்கு வடகிழக்குதிசையில் 265 கி.மீ. இலும் இந்தியாவின் புதுச்சேரியிலிருந்து கிழக்கு வடகிழக்காக 136 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
தற்போது இந்த புயலின் மைய அழுத்தம் 996 மி.பா.ஆக உள்ளது. நகர்வு வேகமும்அதிகரித்துள்ளது. தற்போது மணிக்கு 14 கி.மீ. வேகத்தில் நகர்கின்றது.
இந்த புயல் இன்று நள்ளிரவு அல்லது நாளை காலை தமிழ் நாட்டின்மரக்காணத்துக்கு அண்மித்து கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் நாளை நண்பகல் வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பலபகுதிகளுக்கும் மேக மூட்டத்துடனான வானிலை நிலவும். சில இடங்களில்மிதமானது முதல் சற்று கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
இந்த புயல் கரையைக் கடக்கும் போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின்கரையோரப் பகுதிகளில் காற்றின் வேகம் சற்று அதிகமாக காணப்படும்.
கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள்நாளை மறுதினம் வரை கடலுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது.
இந்த புயலால் இனி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் எந்த ஒருபகுதிக்கும் எவ்விதமான பாதிப்பும் கிடையாது.
இந்த புயல் தமிழ்நாட்டின் மரக்காணத்துக்கும் மாமல்லபுரத்துக்குமிடையில்கரையைக் கடக்கும் என்பதால் அப்பகுதி மக்களுக்காக இறைவனைபிரார்த்திப்போம்.
ஆனால் மீண்டும் எதிர்வரும் 05.12.2024 அன்று கிழக்கு வங்காள விரிகுடாவில்ஒரு காற்று சுழற்சி தோன்றும் வாய்ப்புள்ளது( இதில் மாற்றங்கள் ஏற்படலாம். தொடர்ந்து விபரங்கள் இற்றைப்படுத்தப்படும்).