பாடசாலை அதிபர்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இவ்விடயம் குறித்து அவர் மேலும் கூறுகையில், “பாடசாலை அதிபர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன். இதற்காக நான் அமைச்சரவைக்கு ஒரு பத்திரத்தை சமர்ப்பித்துள்ளேன். ஆசிரியர் தரத்தில் உள்ள ஒருவர் அதிபர் தரத்திற்கு பதவி உயர்த்தப்படும் போது, அவர்களின் அடிப்படை கொடுப்பனவு குறைகின்றது. இது நீண்டகாலமாக இருந்து வரும் பிரச்சினையாகும்.
மேலும், தொடர்பாடல் கொடுப்பனவு மற்றும் போக்குவரத்து கொடுப்பனவுகளை அரசாங்கத்தின் உதவியுடன் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,” என அவர் குறிப்பிட்டார்.