பனை அபிவிருத்திச் சபையின் வளர்ச்சியையே விரும்பாத ஜே.வி.பியா தமிழ் மக்களுக்கான தீர்வைத் தரப்போகின்றது? பசுமை இயக்கத் தலைவர் ஐங்கரநேசன் கேள்வி!

SUB EDITOR
2 Min Read

பனை அபிவிருத்திச்சபையின்  தலைவராக செல்வின் இரேனியஸ்சை கடந்தமாதம் அமைச்சர் விஜிதஹேரத் நியமித்தபோது பனை அபிவிருத்திச்சபைக்குவிடிவுகாலம் பிறந்திருப்பதாகவே நாம் நினைத்தோம். ஆனால், இருவாரகாலத்துக்குள்ளாகவே அவரது நியமனம் இரத்துச் செய்யப்பட்டு மீண்டும்முருங்கை மரம் ஏறும் வேதாளம் போலப் பொருத்தமற்ற ஒருவர் பனைஅபிவிருத்திச்சபையின் தலைவராக  நியமிக்கப்பட்டுள்ளார் என

கடந்த நவம்பர் 03 ஆம் திகதி யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்றஊடகவியலாளர் சந்திப்பில் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,

இந் நியமன மாற்றத்தின் மூலம்  பனை அபிவிருத்திச் சபையின் வளர்ச்சி மேலும்பின்நோக்கித் தள்ளப்பட்டுள்ளது. எமது மக்களில் சிலரும் ஜே.வி.பி தமிழ்மக்களுக்கு நல்லது செய்யும் என்று மனப்பால் குடித்துக்கொண்டிருக்கிறார்கள். பனை அபிவிருத்திச் சபையின் வளர்ச்சியையே விரும்பாத ஜே.வி.பியா தமிழ்மக்களுக்கான தீர்வைத் தரப்போகின்றது.

பனை வளத்துறை முகம்கொடுக்கும் சவால்களை எதிர்கொண்டு அதனைவினைத்திறனுடன் இயங்கவைத்து அதனூடாக மக்களின் வாழ்வாதாரத்தைமேம்படுத்தும் நோக்குடனேயே பனை அபிவிருத்திச்சபை 1978ஆம் ஆண்டுஉருவாக்கப்பட்டது. இதன் தோற்றத்துக்குக் காரணமாக இருந்ததொழிற்சங்கவாதி கே.சி.நித்தியானந்தா முதலாவது தலைவராக இருந்துதிறம்படப் பணியாற்றினார். அதன் பின்னர் தலைவர்களாக இருந்த நடராஜா, கோகுலதாசன் போன்ற  ஒருசிலரைத்தவிர பனை அபிவிருத்திச்சபைக்குதலைவர்களாக நியமிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இதற்குப்பொருத்தமற்றவர்களாகவே இருந்தார்கள். தென்னிலங்கை அரசியல் கட்சிகளில்தேர்தல்களில் போட்டியிட்டுத் தோற்றவர்களும் அக் கட்சிகளின் விசுவாசிகளுமேவேறு போக்கிடமின்றி நியமனம் செய்யப்பட்டதுபோல இங்குஅனுப்பிவைக்கப்பட்டார்கள்.

பனை தமிழ் மக்களின் இயற்கை வளங்களில் முதன்மையானது. நீரைப்பற்றிப்பிடிக்கும் நீர்க்காந்தம் போலப் பனை தொழிற்படுவதாலேயேநிலத்தடிநீரை நாம் பெறக்கூடியதாக இருக்கிறது. தமிழ் மக்களின் பிரதானமானபொருளாதார வளமும் பனைதான். ஆனால் பனை இன்று தேடுவாரற்ற, ஒதுக்கப்பட்ட மரம் போல் ஆகிவருகிறது. பனை அபிவிருத்திச்சபை இப்போதுஇருப்பது போன்றே தொடர்ந்தால் பனை மரத்துக்குச் சாபவிமோசனமேகிடையாது. மத்திய அரசு நிர்வாகத்தின் கீழ் இருக்கும் பனைஅபிவிருத்திச்சபையைத் தொடர்ந்தும் நம்பாமல் மாகாண நிர்வாகத்தின் கீழ்அல்லது சுயாதீனமாகவேனும் பனை வளத்தைப்பேணிப் பனைப்பொருளாதாரத்தை ஊக்குவிற்பதற்கு ஒரு அமைப்பை நிறுவவேண்டியதுகாலத்தின் கட்டாயமாகும். துறைசார் வல்லுநர்கள் இதற்கு முன்வரவேண்டும்.

Share this Article
Exit mobile version