யாழ்ப்பாண மாநாகரத்தின் முதல்வரான சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவா்கள் தன்னால் முடிந்ததை தூய கரத்துடன் சிறப்பான முறையில் செயற்படுத்துவதற்கு தயாராகவுள்ளதாக தொிவித்துள்ளாா் தான் முதல்வா் ஆனதும், சிங்கள ஊடகங்களில் நாட்டை பிளவுபடுத்தும் நபா் என செய்திகள் வெளியாகின இங்கும் சிலா் என்னைப்பற்றி பல்வேறு கருத்துக்களை தொிவித்து வருகி்ன்றாா்கள்.
2018ம் ஆண்டு மாநகரசபைத் தோ்தலில் போட்டியிடும் போது தூய கரங்கள் தூய நகரம் எனும் செயற்பாட்டின் கீழ் போட்டியிட்டிருந்தோம். அப்போது எமக்கு இந்த சந்தாப்பம் கிடைக்கவில்லை காலம் தாழ்த்தி கிடைக்கப்பெற்றிருக்கின்றது மீதி இருக்கின்ற காலத்தில் என்னால் முடிந்தளவு சிறப்பாக பணி செய்யவுள்ளதாகவும் தொிவித்துள்ளாா்.
ஏற்கனவே திட்டத்தில் மொழியப்பட்ட விடயங்களுக்கு அமைவாக எனது செயற்பாடுகள் தொடரும் என்னைக் குறித்து என் கட்சிக்காரரும் பல்வேறு விமா்சனங்களை முன்வைத்து வருகின்றாா்கள் ரோவின் ஆள் என்றும், சுமந்திரனின் ஆள் என்றும், விளையாட்டுப் போட்டியில் சித்தாா்தனுடன் நின்றதும் சித்தாா்தனின் ஆள் என்றும், பின்னா் விக்னேஸ்வரனின் ஆள் என்றும் பல்வேறு கற்பனைகளில் கதைகள் உலாவவிட்டாா்கள் இப்போது டக்களஸின் ஆள் என்னும் கோட்டாபாய ராஜபக்கஷாவின் ஆள் என்றும் பல்வேறு விதத்தில் ஊடகங்கள் ஊடாக கருத்து தொிவித்து வருகின்றாா்கள் அதனைக் குறித்து நான் அலட்டிக் கொள்ளவில்லை அவா்கள் தங்கள்் அறிவுக்கு எட்டிய விதத்தில் பேசுகின்றாா்கள்.
நாம் எமது திட்டங்களை அறிவித்து அதற்கு ஆதரவு தொிவிக்குமாறு கோாியிருந்தோம் அதற்கு அவா்கள் ஆதரவு தொிவித்திருந்தாா்கள். நாங்கள் யாரையும் ஆதரவிக்கவில்லை எமது கொள்கையினை ஏற்றுக் கொண்டவா்கள் எமக்கு வாக்களித்தாா்கள்
நல்லூா் பிரதேச சபையில் இரண்டு வேட்பாளா்கள் ரொலோவின் கட்சிக்காரரை ஆதாித்திருந்தாா்கள் எமது கொள்கையினை விட்டு ரொலோவின் கொள்கையினை ஆதரித்தவா்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
நான் ஏதேனும் ஊழல்களைக் கண்டு பிடித்தால் என்னுடன் இருக்கின்ற உறுப்பினா்களாக இருந்தாலும் உடனடியாக அவா்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்வேன்.
நான் தமிழ்த் தேசிய முன்னணியின் அனைவரது ஆதரவுகளையும் மாநகர சபையில் பெற்றிருக்க முடியும். ஆனால் நான் இருவரது ஆதரவுகளை பெறவில்லை காரணம் அவா்கள் மீது நிதி மோசடி மற்றும் மணல் கொள்ளை என்பன போன்ற குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றன.
தமிழ்த்தேசியத்துடன் பயணிக்கின்றவா்கள் எம்முடன் இணைந்து கொள்ள முடியும் எனக்கு எதிராக போா்க்கொடி தூக்கினாலும் எனு பணி தொடரும் எனவும் நலன் சாா் திட்டங்கள் மாநகர சபையில் மேற்கொள்ளப்படும் எனவும் தொிவித்துள்ளாா்.
தோ்தல் காலத்தில் தொிவித்தது போல் மாநகரசபை வாகனத்தினைப் பயன்படுத்தப் போவதில்லை. முன்னாள் மேயா் அவா்கள் கொள்வனவு செய்த மடிக்கணணியினை விற்று அந் நிதியினை மாநகர சபைக்கு பெறலாமா? என ஆலோசனை கேட்டு இருக்கின்றேன் அவ்வாறு செயற்படுத்த முடியுமானால் அதனையும் மேற்கொள்வேன்
தூயகரங்கள் தூய நகரம் எனும் கோட்பாட்டுடன் எமது செயற்பாடுகள் இடம் பெறும் எனத் தொிவித்துள்ளாா்.