நெடுந்தீவு மகாவித்தியாலத்தின் வருடாந்த விளையாட்டு விழா- 2025 இன் இறுதி போட்டி நிகழ்வு எதிர்வரும் புதன்கிழமை (பெப். 19) மதியம் 2.00 மணிக்கு வித்தியாலய மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
வித்தியாலய அதிபர் ஐ.தயாபரன் தலைமையில் இடம்பெறவுள்ள விளையாட்டு நிகழ்வின் பிரதம விருந்தினராக மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக்டிறஞ்சன் அவர்களும் சிறப்பு விருந்தினராக தீவக வலய கல்விப் பணிப்பாளர் ரி.ஞானசுந்தரம் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.