நெடுந்தீவு மகா வித்தியாலயத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான பரிசில் தினம் நேற்றைய தினம் (மே 25) வித்தியாலய அதிபர் ஏ. சச்சிதானந்தம் தலைமையில் வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக ஓய்வு நிலை அதிபர் திருமதி பா. செல்வராணி அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
2022 ஆம் ஆண்டில் பாடசாலை ரீதியாக பாடங்களில் அதிகூடிய புள்ளிகளை பெற்ற மாணவர்கள்,வகுப்புகளில் முதலிடம் பெற்ற மாணவர்கள், மற்றும் மொழித்திறன் போட்டிகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில் கோட்டம், வலயம், மாகாணம் மற்றும் தேசிய மட்டங்களில் கலந்து கொண்ட, வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள்,பாராட்டுக்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
2022 ஆம் ஆண்டுக்கான பரிசில் தினம் நாகேந்திரர் செல்லம்மா அறக்கட்டளை அனுசரணையோடு இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வுகளில் அயற் பாடசாலைகளின் அதிபர்கள், நலன் விரும்பிகள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.