விதையனைத்தும் விருட்சமே செயற்றிட்டம் ஊடாக நெடுந்தீவில் உள்ள5வயதுக்கும் குறைந்த குழந்தைகளை உடைய 50 குடும்பங்களுக்கானநுளம்புவலைகள் நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் வைத்து நேற்றையதினம் (டிசம்பர் 03) வழங்கிவைக்கப்பட்டது.
நெடுந்தீவு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர்திருமதி.நிவேதிகா கேதீசன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கடும் மழையினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டமைகுறிப்பிடத்தக்கது.