நெடுந்தீவு தென்னிந்திய திருச்சபையின் மத்தி முன்பள்ளி ஆசிரியைகளை கௌரவிக்கும் வகையில் ஆசிரியர்தினம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஒக். 06) கொண்டாடப்பட்டது.
முன்பள்ளி சிறார்கள், பெற்றோர்கள் இணைந்து முன்பள்ளி வளாகத்தில் கொண்டாடப்பட்ட நிகழ்வில் ஆசிரியைகளுக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு , பரிசில்களும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் தென்னிந்திய திருச்சபையின் நெடுந்தீவுக்கான வண. போதகர், ஆசிரியைகள், பெற்றோர்கள் மற்றும் சிறார்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.