நெடுந்தீவு தென்னிந்திய திருச்சபையின் மத்தி மற்றும் மேற்கு முன்பள்ளி மழலைகளின் விளையாட்டு நிகழ்வு- 2024 நெடுந்தீவு மத்தி தென்னிந்தியதிருச்சபை வளாகத்தில் நேற்றைய தினம்(ஜூலை26) சிறப்பாக இடம்பெற்றது.
நெடுந்தீவு தென்னிந்திய திருச்சபையின் போதகர் அருட்பணி G. றொபின்சன்அடிகளார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முதன்மை விருந்தினராகதென்னிந்திய திருச்சபையின் சலோம்நகர் போதகரும் சோபியா சிறுவர்மேம்பாட்டு இல்ல இயக்குனருமான அருட்பணி தாவீது அடிகளாரும் சிறப்புவிருந்தினராக நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்பணி ப.பத்திநாதன் அடிகளார், அருட்சகோதரிகள், மற்றும் இந்துமத குரு கா.புவனேந்திரசர்மா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
மழைகளின் விளையாட்டுக்கள் மற்றும் பரிசளிப்பு நிகழ்வுகளும் சிறப்பானஒழுங்குபடுத்தலில் இடம்பெற்றமை விருந்தினர்களின் பாராட்டை பெற்றிருந்தது.
தென்னிந்திய திருச்சபை நீண்டகாலமாக நெடுந்தீவு மண்ணில் பலமாணவர்களை உருவாக்கிய வரலாறு கொண்டதாகவும் யாழ் ஆதீனத்தின் ஆயர்அவர்கள் தனது மேலான கரிசனையுடன் முன்பள்ளிகளை மேம்படுத்தஎண்ணியிருப்பதாக தனது உரையில் குறிப்பிட்ட பிரதம விருந்தினர்அர்பணிப்போடு சேவையாற்றும் ஆசிரியர்களுக்கும் தனது பாராட்டுக்களையும்தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.