நெடுந்தீவு உதைப்பந்தாட்ட லீக் தொடர் (DFL) -2024 போட்டித் தொடரின் இறுதிப் போட்டி நேற்றையதினம் (ஆகஸ்ட்18) நெடுந்தீவு மகாவித்தியாலயமைதானத்தில் கோலாகலமாக இடம்பெற்றது.
இவ் உதைப்பந்தாட்ட தொடரின் இறுதி போட்டியில் அருள் ஜோசப்தலைமையிலான ஈகில் எய்ட் அணியினர் கரிகாலன் சேனை அணியினரை 2:0 என்ற கோல் அடிப்படையில் வெற்றி வாகை சூடி 2024 கிண்ணத்தினை தனதாக்கிக் கொண்டது.
நெடுந்தீவு உதைப்பந்தாட்ட லீக் தொடர் (DFL) -2024 , தொடரின் நாயகன்விருது ஈகில் அணியின் அருள் ஜோசப்
இறுதி போட்டியின் ஆட்டநாயகனாக கிருசாந்த் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.
இப் போட்டித் தொடரில் ஈகில் எய்ட் அணி 130,000.00 பணப்பரிசினையும்பெற்றுக் கொண்டதுடன், கரிகாலன் சேனை இரண்டாம் இடம் பெற்று100,000.00 பணப் பரிசினையும் , 3 ஆம் இடம் பெற்ற வெண்புறா அணியினர்50,000.00 பணப்பரிசினை பெற்று கொண்டனர்.
நெடுந்தீவு உதைப்பந்தாட்ட லீக் தொடர் – 2024 ஆகஸ்ட் 16 (வெள்ளி) ஆரம்பமாகி நேற்றையதினம் (ஆகஸ்ட் 18 ) இறுதிப்போட்டியுடன் நிறைவுபெற்றது.
05 உரிமையாளர்களஇன் கீழ் 05 அணிகளின் பங்குபற்றலுடன் இடம்பெற்றதை குறிப்பிடத்தக்கது.