நெடுந்தீவில் 6 பேர் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரை எதிர்வரும் ஜூன் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊற்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டார்.
நெடுந்தீவில் ஆறு பேர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் ஊர்காவற்றுறை நிதிமன்றில் இன்று (மே 23) சந்தேகநபர் முற்படுத்தப்பட்டார்.
தொடர்ந்து சந்தேக நபரை எதிர்வரும் 06 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டார்.
இந்தச் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு அருகாமையிலுள்ள உணவக உரிமையாளர் மற்றும் கொலையுண்டவர்களது இரத்த உறவினர்கள் இருவர் ஆகியோரும் இன்றையதினம் (மே 23) நீதிமன்றில் பிரசன்னமாகி வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
கடந்த தவணை ஊற்காவற்றுறை நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது சந்தேக நபர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு
அடையாள அணிவகுப்புக்குட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.