நெடுந்தீவில் மேலும் ஒருவருக்கு கொரோனா
நெடுந்தீவில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆயினும் அவர் ஏற்கனவே தொற்றுக்கு அடையாளம் காணப்பட்டவருடன் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
குழந்தைகளுக்கு தடுப்பூசி ஏற்றி மருத்துவ தாதிக்கு வேலணையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டமையினைத் தொடர்;ந்து அதனுடன் தொடர்புடைய 42 பேருக்கு பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட போதும் யாருக்கும் தொற்று ஏற்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த வாரம் நெடுந்தீவில் ஒரு தொற்றாளர் அடையாளம் காணப்பட்டமையினைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அதன் பின்னர் இதுவரை 17 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அடையாளம் காணப்பட்ட அனைவரும் தாக்கம் குறைந்த கொரோனா தொற்றாகவே அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் மிக விரைவில் குணமடையக்கூடிய நிலமையே காணப்படுகின்றது. இன்று அடையாளம் காணப்பட்டவரை தவிர்ந்த அனைவரும் கொரோனா சிகிச்சை மையங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
இதனை விட நேற்றைய தினம் (ஜீலை 28) 38 பேருக்கும் இன்றைய தினம் (ஜீலை 29) 56 பேருக்கும் பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களுக்கான முடிவுகள் நாளை, நாளை மறுதினம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.