நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பும் , அற்புதம் அறக்கட்டளையும் இணைந்து கலைக் கோயில் நுண்கலைக் கல்லூரி (கனடா) ஊடாக நடாத்த்தும் நடன கற்கையினை தொடரும் மாணவர்களுக்கான கோல உடைகள் அற்புதம் அறக்கட்டளையினரால் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
அண்மையில் இடம்பெற்ற நெடுவூர்த் திருவிழா – 2024 நிகழ்வுகளின் போது இவ் உடைகள் பாடசாலைகள் ஊடாகவும் , விழாவின் போதும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் முதல் நடன கற்கை வகுப்புகள் நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம் மற்றும் நெடுந்தீவு றோ. க. மகளிர் கல்லூரி ஆகியவற்றில் ஏனைய பாடசாலை மாணவர்களையும் இணைந்து ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்று வருகின்றது.
இதேவேளை நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பும் , அற்புதம் அறக்கட்டளையும் இணைந்து கலைக் கோயில் நுண்கலைக் கல்லூரி (கனடா) ஊடாக நுண்கலைக் கற்கைநெறியினை நடாத்துவதற்கான ஆரம்ப விழா சிறம்பான முறையில் ஜூன் 25 இல் நெடுந்தீவு றோ. க. மகளிர் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.