குறிகாட்டுவான் துறைமுகத்திலிருந்து நெடுந்தீவுக்கான கட்டுமானப் பொருட்களை ஏற்றிச்சென்ற படகில் பயணிகளும் சென்ற காரணத்தால் படகின் முன்பகுதியால் கடல்நீர் உட்புகுந்த நிலையிலும் கரைக்கு கொண்டுசெல்லும் வேளை தெய்வாதீனமாக துறைமுக நுழைவாயில் பகுதியில் அசம்பாவிதம் இடம்பெற்றதால் பயணிகள் உயிராபத்து இன்றி இன்று(ஜூன் 7) காலை தப்பி கொண்டனர்.
நெடுந்தீவிலிருந்து குறிகாட்டுவானுக்கு சமுத்திர தேவா படகு இன்றைய தினம் சேவையில் ஈடுபட்டு பயணிகளை ஏற்றுவதற்காக சென்ற வேலையிலும் அதற்கு முன்பாக மேலதிகமான பொருட்களை ஏற்றிய தனியார் ஒருவருக்கு சொந்தமான படகானது துறைமுகத்தில் காத்திருந்த நெடுந்தீவுக்கு செல்கின்ற பயணிகள் 35 பேரையும் ஏற்றியதால் படகு மேலதிக பாரம் காரணமாக பெரும் சிரமத்துக்கு மத்தியில் கரை நோக்கி சென்ற வேளையில் துறைமுக நுழைவாயில் பகுதியில் தண்ணீர் உட்புகுந்து தரை தட்டியது.
இதன் காரணமாக அதில் சென்ற பயணிகள் பெரும் சிரமங்களையும் உயிராபத்தையும் எதிர் கொண்டு தப்பித்துள்ளனர்.
நெடுந்தீவில் நின்ற படகு மூலம் பயணிகள் இறக்கப்பட்டதுடன் படகில் இருந்த பொருட்கள் வேறு படகு மூலம் இறக்கும் நடவடிக்கை இடம்பெற்றது.
பயணிகள் சேவைக்கென படகுகள் சேவையில் ஈடுபடும்போதும் பொருட்கள் ஏற்றும் தனியார் படகு உரிமையாளர்கள் இவ்வாறான செயற்பாடுகளில் பொது மக்களை ஏற்றுவதன் காரணமாக சேவையில் ஈடுபடும் படகுக்கான வருமான இழப்பு ஏற்படுகின்றமை இங்கே குறிப்பிடத்தக்கது.