ஈழ மக்கள் ஜனநாயக கட்சி மூத்த உறுப்பினரும் கட்சியின் யாழ் மாவட்ட முன்னாள் அமைப்பாளரும் , முன்னாள் நாடாளுமன்றஉறுப்பின்ருமான அமரர் சில்வேஸ்திரி அலன்ரின் [தோழர் உதயன்] அவர்களுக்கு ஈ.பி.டி.பி இன் முக்கிய உறுப்பினர்கள் இன்று (ஜூன் 28) காலை நேரில் சென்று அஞ்சலிமரியாதை செலுத்தியுள்ளனர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சில்வேஸ்திரி அலன்ரின் அவர்கள் நெடுந்தீவில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருந்தார். அன்னார் நெடுந்தீவு 06 ஆம் வட்டாரத்தினை பிறப்பிடமாகவும் 09ஆம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்டவர்.