நெடுந்தீவு ஊரும் உறவும நிறுவனம் சுயசார்பு பொருளாதாரத்தை மேம்படுத்தவும்சமூகத்தில் நிலவும் போசனைக் குறைபாட்டினை நிவர்த்தி செய்யும் வண்ணமும்முதற்கட்டமாக மூன்றுமாத்த்திற்கு மேற்பட்ட 330 கோழிக்குஞ்சுகள் நெடுந்தீவில்உள்ள 33 குடும்பங்களை ஒன்றிணைத்து “நல்வாழ்வு நம்கையில்” எனும்தொனிப்பொருளில் நடைபெறும் விவசாய செயற்திட்டதுடன் ஊர் கோழிவளர்ப்புத்திட்டம் கடந்த செவ்வாய்கிழமை (நவம்பர் 12) ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.
கோழி முட்டை உற்பத்தி மற்றும் விநியோகத்தில் ஆர்வமும் செயற்திறனும்கொண்ட 33 குடும்பங்களை ஊரும் உறவும் நிறுவனத்தின்நிர்வாகஉறுப்பினர்கள் மற்றும் வட்டாரப் பிரதிநிதிகளினூடாக தேர்வு செய்யப்பட்டுவழங்கப்பட்டது.
இத்திட்டத்திற்கான நிதி அனுசரணையினை பரமானந்தம் ஆசிரியர் மற்றும் பிரபாகரன் ஆகியோர் வழங்கியதுடன்
இச்சமூக பொறுப்புடன் கூடிய செயற்திட்டத்தில் வினைத்திறனுடன் செயற்படும்குடும்பங்களிற்கு ஊக்குவிப்பு பரிசில்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.