நாட்டில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவும் ஆபத்தை கட்டுப்படுத்துவதற்காக கடுமையான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு கொவிட் தடுப்பிற்கான விசேட செயலணி மீளாய்வுக் குழு தீர்மானித்துள்ளது.
இதன்படி, தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் கட்டில்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், நோயாளிகளுக்கு தேவையான ஒட்சிசனை வழங்குதல், தரவு சேகரிப்பு முறையைப் பலப்படுத்தல், சுகாதார ஊழியர்களுக்கு பாதுகாப்புமிக்க உடைகளை வழங்குதல், நோயாளிகளின் நோய் நிலைமைக்கு அமைய பொருத்தமான வைத்தியசாலைகளுக்கு அனுப்புதல், சிகிச்சை நடவடிக்கைகளுக்கு பிரதேச மற்றும் மாவட்ட மட்டத்தில் வைத்தியசாலைகளை இனங்காணல், அவற்றுக்குத் தேவையான மருத்துவ வசதிகளை வழங்குதல் போன்ற பல தீர்மானங்கள் இன்று மேற்கொள்ளப்பட்டன.
தற்போது மேற்கொள்ளப்படும் நாளாந்த ´பிசிஆர்´ பரிசோதனைகளின் எண்ணிக்கையை 15 ஆயிரம் வரை அதிகரிப்பதற்கும் நிபுணர்கள் செயற்குழு நேற்று தீர்மானித்துள்ளது.
தனிமைப்படுத்தல் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்தல், சட்டத்தை மீறுவோருக்கு எதிராக தண்டனை வழங்குதல் போன்ற விடயங்கள் மீது அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தலைமையில் கூடிய இந்தக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது