உலக எய்ட்ஸ் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
மக்கள் தொகை அளவில் உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது, இலங்கை எயிட்ஸ் நோய் பரவல் குறைவாகக் காணப்படும் நாடுகளில் ஒன்றாகும்.
ஆனால், கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டில் இலங்கையில் எயிட்ஸ் நோய் பரவல் அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த தேசிய பாலியல் மற்றும் எயிட்ஸ் தடுப்புத் திட்டத்தின் இயக்குநரும் சமூக சுகாதார நிபுணருமான வைத்தியர் விந்தியா குமாரிபெலி, 2020-21 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 2022-23 ஆண்டுகளில் எயிட்ஸ் வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதாக கூறினார்.
“2020-21 காலக்கட்டத்தில் 200 முதல் 300 வரை எயிட்ஸ் நோயாளர்கள் பதிவாகியிருந்தனர்,” என்று அவர் தெரிவித்தார்.