சுனாமிப் பேரவலத்தின் 18 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வுகள் இன்று வடக்கு மாகாணம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றன.
முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், வடமராட்சி எனப் பல இடங்களில் சுனாமிப் பேரலையில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
வடமராட்சி உடுத்துறை, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் பல்கலைக் கழகம் ஆகிய இடங்களில் சுனாமி நினைவாலயங்களில் சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதேவேளை, அனர்த்த முகாமைத்துவப் பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுனாமி நினைவேந்தல் நிகழ்வு காலி பெரெலிய சுனாமி நினைவுத் தூபி முன்றலில் நடைபெற்றது.