நாடாளுமன்ற உறுப்பினராகுமாறு பசில் ராஜபக்சவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்- அவர் இன்னமும் பதிலளிக்கவில்லை- சாகர
நாடாளுமன்ற உறுப்பினராவதற்கு பசில் ராஜபக்ச இணங்கினால் நாங்கள் மகிழ்ச்சியுடன் அதனை ஏற்றுக்கொள்வோம் என பொதுஜனபெரமுனவின் பொதுசெயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
கட்சியின் பல தரப்பினர் பசில்ராஜபக்சவை நாடாளுமன்ற உறுப்பினராகும்படி கேட்டுக்கொண்டுள்ளனர் அவர் அதற்கு இணங்கினால் அவரை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.
அவர் நேற்று இலங்கை வந்துள்ளார் தனிமைப்படுத்தலை முன்னெடுத்துள்ளார் நாங்கள் அவரை நாடாளுமன்ற உறுப்பினராகுமாறு கேட்டுக்கொண்டுள்ளோம் அவர் அதற்கு இன்னமும் பதில் அளிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறான முடிவு எட்டப்படும் என்றால் நாங்கள் அது குறித்து பெருமிதத்துடன் செய்தியாளர் மாநாட்டில் அறிவிப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர் இன்னமும் இணக்கம் தெரிவிக்கவில்லை இதன் காரணமாக அவர் பொருளாதார அமைச்சராக நியமிக்கப்படுவார் என்ற தகவல் பிழையானது எனவும் சாகரகாரியவசம் தெரிவித்துள்ளார்.