தீவக வலய பாடசாலை மாணவர்களுக்கு யாழ். இந்துக் கல்லூரியால் உலர் உணவுப் பொதிகள் விநியோகம்
தீவகப் பகுதியில் தற்போதைய இடர் கால நிலையில் பாதிக்கப்பட்ட 10 பாடசாலைகளைச் சேர்ந்த 200 மாணவர்களுக்கு ரூபா 3,500 பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் இந்துக் கல்லூரி சமூகத்தின் நிதி உதவியுடன் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா உத்தியோகத்தர்களால் 18.06.2021 அன்று வழங்கி வைக்கப்பட்டன.
தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் பாடசாலைகளின் தெரிவை மேற்கொண்டிருந்தார்.
இதன்படி வேலணை சரஸ்வதி வித்தியாலயம், சரவணை நாகேஸ்வரி மகா வித்தியாலயம், வேலணை சைவப்பிரகாசா வித்தியாலயம், வேலணை மேற்கு நடராஜா வித்தியாலயம், கரம்பொன் சண்முகநாத மகா வித்தியாலயம், எழுவை தீவு முருகவேள் வித்தியலாயம், வேலணை கிழக்கு மகா வித்தியாலயம், எழுவை தீவு றோ.க.த.க பாடசாலை,மெலிஞ்சிமுனை றோ.க. தமிழ் கலவன் வித்தியாலயம், சின்னமடு றோ.க. தமிழ் கலவன் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கு இந்நிவாரணப் பொதிகள் வழங்கப்பட்டன.
வேலணை மற்றும் ஊர்காவற்றுறை கோட்டக்கல்விப் பணிப்பளர்கள், பாடசாலை அதிபர்கள் மாணவர்களுக்கான உதவிப் பொருட்களை பொறுப் பேற்றிருந்தனர்