எதிர்வரும் நவம்பர் 14, அன்று நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில்போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும், 2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்கஊழல் தடுப்புச் சட்டத்தின்படி சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்தஅறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம்தெரிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க விடுத்துள்ளஅறிக்கையில்,
அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் வேட்பாளர்கள் தமதுசொத்துப் பிரகடனங்களை வேட்புமனுவுடன் சமர்ப்பிக்க வேண்டும் எனகூறப்பட்டுள்ளது.
இதேவேளை, தேசியப் பட்டியல் வேட்புமனுக்களை கோருபவர்களும் தமதுசொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான அறிக்கைகளை சமர்ப்பிக்கவேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.