நேற்று முதல் தொடர்சியாக வடக்கில் அதிக காற்று வீசி வருகின்றது. குறிப்பாக நேற்று முதல் நெடுந்தீவில் பலத்த காற்று வீசி வருகின்றது. குறிப்பாக நேற்று மாலை (மே – 25) நெடுந்தீவில் பலத்த காற்று வீசியதுடன் இன்று காலை இலேசாக குறைந்துள்ள போதும் தொடர்ச்சியாக வீசிய வண்ணமே உள்ளது.
இக்காற்று காரணமாக பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதுடன் சில சேதாரங்களும் இடம் பெற்றன. இதன் காரணமாக நேற்றைய இரவு குறிபிட்ட சில இடங்களுக்கு மின்சாரம் தடைப்பட்ட நிலமையும் ஏற்பட்டது.
பாதிப்புக்கள் ஏற்பட்ட பகுதியினை விட மற்றைய பகுதிகளிற்கான மின் விநியோகம் சீராக இடம் பெற்றதுடன் உடனுக்குடன் இயன்றளவு சீர் செய்யப்பட்டு மிக விரைவாக மின்சாரம் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்ட ஆளனியினர் பணி புரிகின்ற போதும், மின்சார சபையினர் விரைவாக செயற்பட்டு வருகின்றனர்.
பாதிப்புற்ற இடங்களில் சிலர் தாங்களாகவே முன்வந்து மக்கள் போக்குவரத்திற்கான இடையூறுகளை அகற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.
கடற்தொழிலுக்கு செல்வது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதுடன் மக்கள் பாதுகாப்பாக வாழ வேண்டிய நிலமை காணப்படுகின்றது. இக்காலப்பகுதிகளில் மக்கள்அவதானத்துடனும் குழுவாகவும் செயற்படவேண்டிய தேவைப்பாடு காணப்படுகின்றது.