முதியோர் மகிழ்வூட்டும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்பணி வசந்தன் அடிகளார் தலைமையில் தூய யுவானியார் ஆலயத்தில் கடந்த புதன்கிழமை (மே 24) காலை முதல் நண்பகல் வரை இடம்பெற்றது.
திருப்பலியை யாழ் ஆயர் அவர்களின் செயலாளர் அருட்பணி றெக்சன் அடிகளார் மற்றும் அருட்பணி சுதர்சன் அடிகளார் இணைந்து ஒப்புக்கொடுத்தனர்.
திருப்பலியின் நிறைவில் முதியோர் மகிழ்வூட்டும் நிகழ்வும் மதியபோசனமும் இடம்பெற்றது.
நிகழ்வுக்கான நிதி அனுசரணையை இறைவனின் நித்திய இளைப்பாறல் பெறுகின்ற விசுவாசிகளான அமரர் லோறன்ஸ் ஜேக்கப், அமரர் மேரி ஜோசப்பின், அமரர் பஜசீலி பார்பறா மற்றும் அமரர் மைக்கல் ஆகியோரின் குடும்பத்தினர் வழங்கியிருந்தனர்.
காலத்தின் தேவையறிந்து தம் ஊரின் சொந்தங்களோடு மனித மாண்புகளைப் பகிர்ந்து முன்மாதிரியாகவும் பொறுப்புணர்வுடனும் இருந்துவருகின்ற தீவைச்சார்ந்த புலம்பெயர் உறவுகளுக்கும் குறிப்பாக இன்றைய நாளின் அனுசரணையாளர்களான குடும்பத்தினருக்கும் தனது ஆழமான நன்றிகளை பங்குத்தந்தை நிகழ்வின் நிறைவில் குறிப்பிட்டார்.