தீவக வலய மட்டத்திலான கடற்கரை கைப்பந்து போட்டியில் முதன்முதலாககளமிறங்கிய நெடுந்தீவு மகாவித்தியாலய இரு அணிகளும் மாகாண மட்டப்போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.
20 வயது பிரிவு ஆண்களுக்கான போட்டியில் இரண்டாம் இடத்தினையும் 17 வயது பிரிவு ஆண்களுக்கான போட்டியில் மூன்றாம் இடத்தினையும் பெற்று சாதனை படைத்து நெடுந்தீவுக்கும், பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
நடந்து முடிந்த குறித்த கடற்கரை கைப்பந்து போட்டிகளின் முடிவு.
17 வயது பிரிவு
1. காரைநகர் வியாவில் வித்தியாலயம்
2. வேலணை மத்திய கல்லூரி
3. நெடுந்தீவு மகாவித்தியாலயம்
20 வயது பிரிவு
1. காரைநகர் வியாவில்வித்தியாலயம்
2.நெடுந்தீவு மகாவித்தியாலயம்
3. வேலணை மத்திய கல்லூரி