எழுதுதல், வாசித்தல் திறன் குறைந்தோர் சாரதி அனுமதிப் பத்திரம் பெற்றுக்கொள்வதற்கான வாய் மொழி பரீட்சை எதிர்வரும் 25 ஆம் மற்றும் 26ஆம் திகதிகளில் யாழ்.மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் நடைபெறவுள்ளது.
அந்தவகையில் பரீட்சார்த்திகள், தமது பிரதேச செயலகத்தில் விண்ணப்ப படிவங்களை பெற்று , அதனை பூர்த்தி செய்து கிராம சேவையாளர் மற்றும் பிரதேச செயலாளரிடம் அதனை உறுதிப்படுத்துவதோடு, எழுதுதல் , வாசித்தல் திறன் குறைந்தோர் என்பதனை உறுதிப்படுத்தும் ஆவணத்தையும் சமர்பித்து, மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் முற்பதிவுகளை மேற்கொண்டு குறித்த திகதிகளில் வாய் மொழி பரீட்சையில் தோற்ற முடியும் என மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார்
இதேவேளை யாழ்.மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தினால், சேதமடைந்த அல்லது தெளிவற்ற வாகன அடிச்சட்ட இலக்கங்களை மீள பொறிக்கும் நடவடிக்கை எதிர்வரும் 25 ஆம் மற்றும் 26ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்நிலையில் தேவைப்பாடு உடையோர், தமது மோட்டார் வாகனப் பதிவுச் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை என்பவற்றுடன் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் முற்பதிவுகளை மேற்கொண்டு, குறித்த திகதிகளில் வாகன அடிச்சட்ட இலக்கங்களை மீளப் பொறித்துக்கொள்ள முடியும் என யாழ்.மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
இந்நிகழ்வில் வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்காள பிரதிப் பணிப்பாளர் லாகினி நிருபராஷ் மற்றும் வேலணை மத்திய கல்லூரி அதிபர் ஹஸ்ரன் றோய் ஆகியோருடன் சிறப்பு விருந்தினராக அன்னை கடலுணவு வாணிப உரிமையாளர் செபஷ்ரியாம்பிள்ளை அமலதாஷ் ஆகியோர் கலந்து சிறப்பித்துருந்தமை குறிப்பிடத்தக்கது.