கொடகே தேசிய தமிழ் ஆக்க இலக்கியப் பிரதிகளுக்கான போட்டி-2020
(இலங்கையில் வசிக்கும் தமிழ் எழுத்தாளர்களுக்கான போட்டி இது.)
கொடகே நிறுவனம் நாடாத்தும் தமிழ் ஆக்க இலக்கியப் பிரதிகள் போட்டிக்கெனப் பிரசுரிக்கப்படாத நாவல். சிறுகதைத்தொகுப்பு, கவிதைத் தொகுப்புக்கான பிரதிகள் கோரப்படுகின்றன.
நாவல்
போட்டிக்கு அனுப்பப்படும் நாவலுக்கான பிரதி A4 – தாள் அளவில் 80 பக்கங்களுக்குக் குறையாமலும், 150 பக்கங்களுக்கு அதிகரிக்காமலும் இருத்தல் வேண்டும்.
சிறுகதைத்தொகுப்பு
சிறுகதைத் தொகுப்புக்கான பிரதி 10 சிறுகதைகளுக்குக் குறையாமலும், 15 கதைகளுக்கு மேற்படாமல் இருத்தல் வேண்டும். A4 – தாள் அளவில் 40 பக்கத்துக்குக் குறையாமலும் 120 பக்கங்களுக்குக் குறையாமல் இருத்தல் வேண்டும்.
கவிதைத்தொகுப்பு
கவிதைத் தொகுப்புக்கு அனுப்படும் பிரதி 50 கவிதைகளுக்குக் குறையாமலும் ,75 கவிதைகளுக்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும் A4 – தாள் அளவில் 28 பக்கத்துக்குக் குறையாமலும் 80 பக்கங்களுக்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும்.
விதிகள்
சிறந்தப் பிரதியாக தெரிவு செய்யப்படும் ஒவ்வொன்றுக்கும் (நாவல், சிறுகதை, கவிதை) பணப் பரிசில்களும் விருதுகளும் வழங்கப்படும்.
போட்டிக்கு அனுப்படும் எல்லாப் பிரதிகளும் A4 அளவில் 12 Point Baamini Font யில் கணனியில் தட்டெழுத்து செய்யப்பட்டு அனுப்பப்படல்வேண்டும்.
மேற்படி போட்டிகளுக்கு அனுப்பப்படும் பிரதிகள் ஏலவே நூல் உருவில் வெளிவராதவையாக இருத்தல் வேண்டும்.
எந்தவொரு பிரதியின் உள்ளடக்கம் இலங்கை தேசியச் சமூகக் கலாச்சாரத்தைப் பாதிக்காத வகையில் அமைந்திருத்தல் வேண்டும்.
கணனி தட்டச்சு செய்யப்பட்டு அனுப்பப்படும் பிரதியின் எந்தவொரு இடத்திலும் படைப்பாளியின் எந்தவொரு விபரங்களும் இடம் பெறலாகாது. பிரதியைப் பற்றிய சுருக்கக் குறிப்பும், எழுத்தாளரைப் பற்றிய சுயவிபர விண்ணப்பமும் பிரத்தியேகமாகப் பிரதியுடன் இணைத்து அனுப்பப்படல் வேண்டும்.
போட்டிக்கு ஒரு துறைக்கு ஒரு பிரதி மட்டுமே அனுப்பினால் போதுமானது,
இப்போட்டிக்கான நடுவர் தீர்மானமே இறுதியானது.
பிரதிகளை எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ந்திகதிக்குள் கீழ் காணும் விலாசத்திற்கு தபால் மூலமாகவோ, நேரடியாகவோ சேர்ப்பிக்க வேண்டும்.
எஸ். கொடகே சகோதரர்கள் பிரைவேட் லிமிடெட், 661, 665, 675, மருதானை வீதி, கொழும்பு-10.
மேலதிக விபரங்களுக்கு- 0778681464- மேமன்கவி
தேசபந்து சிரிசுமன கொடகே –
அமைப்பாளர்
மேமன்கவி- இணைப்பாளர்