ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மக்களின் அன்றாட வாழ்க்கையில் இடையூறு இல்லாத வகையில், தேர்தலுக்குப் பிந்தைய காலத்தில் நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநிறுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இன்று (செப் 20) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதில், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்துவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனத்தில் கொண்டு கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
மேலும், நாட்டில் சட்ட ஒழுங்கை நிலைநிறுத்துதல், வேட்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல், வாக்கு எண்ணும் மையங்கள் அருகே பாதுகாப்பை பலப்படுத்துதல், மற்றும் தேர்தல் ஆணைக்குழுவிற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குதல் ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அதோடு, தேர்தலுக்குப் பின்வரும் காலத்தில் மக்களின் இயல்பான வாழ்க்கை பாதிக்கப்படாமல், சட்ட ஒழுங்கை நிலைநிறுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.