வடக்கு மாகாண உயிர்க்காப்பு சம்மேளனத்தின் திறந்த நீர் நிலையில் “பாதுகாப்பிற்கான நீச்சல்” நிகழ்ச்சித் திட்டத்தின் இரண்டாவது அணியின் பயிற்சிகள் செம்மலையில் நடைபெற்றது.
பயிற்சிக்கான சான்றிதழ்கள் சர்வதேச உயிர்க்காப்பு சம்மேளனத்தின் அனுசரணையுடன் இலங்கை உயிர்க்காப்பு சம்மேளனத்தினால் அண்மையில் வழங்கப்பட்டது.
இலங்கை உயிர்க்காப்பு சம்மேளனம் 2019 ஆம் ஆண்டிலிருந்து வடக்கு மாகாணத்தில் தனது பயிற்சிகளை விரிவுபடுத்தியுள்ளது.
நீச்சல் தடாக உயிர்க்காப்பு வீரர்களுக்கான சான்றிதழ் புதுப்பித்தல் நிகழ்வு விரைவில் நடைபெறவுள்ளது.
சான்றிதழ்களைப் புதுப்பிக்க விரும்புவோர் இலங்கை உயிர்காப்பு சம்மேளனத்தின் வடக்கு மாகாண இணைப்பாளர் ஸ்ரீ ஜனனன் அவர்களை தொடர்பு கொள்ளவும்.
தொலைபேசி இலக்கம் 0770601141.